இவர்கள் இருவரையும் எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதுவே எங்களின் தோல்விக்கு காரணம் – கோலி வருத்தம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ராகுல், ரிஷப் பண்ட், கோலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்களை குவித்தது. ராகுல் 108 ரன்களும், பண்ட் 77 ரன்கள் மற்றும் கோலி 66 ரன்கள் என பேட்டிங்கில் அசத்தினார்கள்.

Rahul

- Advertisement -

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரான பேர்ஸ்டோ 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 99 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன்குவிப்பை வழங்கியதால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர்களை சுருட்டை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும் இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் ஒரு டீசன்டான ரன் குவிப்பை வழங்கியிருந்தோம். இருப்பினும் எங்களது பந்து வீச்சில் சற்று தடுமாற்றம் இருந்தது. புதிய பந்தில் லைன் அண்ட் லென்த் சரியாக வீசினாலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

bairstow

அவர்கள் இதே போன்று பலமுறை விளையாடி இருக்கின்றனர். நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் அவர்கள் எங்கள் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடியது எங்களது சரிவுக்கு காரணமாக அமைந்தது. மேலும் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரது கூட்டணியை பிரிக்க எங்களால் முடியவில்லை. இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் தான் எங்கள் அணிக்கு அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

stokes

இந்த போட்டியில் மைதானம் சிறப்பாக இருந்ததால் மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் கூற முடியாது. இதே அளவில் நாங்கள் ரன் குவித்து கடந்த போட்டியில் அவர்களை வீழ்த்தி இருந்தோம் ஆனால் இம்முறை போட்டியில் நிறைய தவறுகள் இருந்தன என கோலி வெளிப்படையாக ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement