தவறுகளை ஒத்துக்கொள்கிறோம். மோசமான தோல்விக்கு காரணம் இதுதான் – கோலி வெளிப்படை

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே குவிக்க இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மைதானத்தின் தன்மையை அறிந்து விளையாட தவறிவிட்டோம். தேவையில்லாத ஷாட்டுகளை விளையாடி தான் வீரர்கள் ஆட்டம் இழந்தார்கள். நானும் அதில் ஒருவர் என கோலி தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய கோலி : இந்த போட்டியில் செய்த தவறுகளை ஒத்துக் கொள்கிறோம்.

அடுத்த போட்டியில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த போட்டியின் மூலம் கற்றுக் கொண்டோம். ஷ்ரேயாஸ் ஐயர் எப்படி கிரீஸை பயன்படுத்த வேண்டும், பவுன்சர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஸ்ரேயாஸ் அய்யர் தெளிவுபடுத்தினார்.

shreyas

இங்கிலாந்து அணி வீரர்கள் எங்களைவிட இந்த போட்டியில் சிறப்பாக அனைத்து துறைகளிலும் செயல்பட்டனர். மைதானத்தை கணிக்க போதிய நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்தும் எங்களால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை என கோலி தெரிவித்தார். மேலும் முதல் போட்டியில் செய்த தவறுகளில் இருந்து கற்ற பாடங்களின் மூலம் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று கோலி உறுதி அளித்துள்ளார்.

- Advertisement -

eng

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மா விளையாடாதது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.