இவர் இப்படி ஆடினால் நாங்கள் எப்படி வெற்றிபெற முடியும் – கோலி வெளிப்படை

Kohli-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார்.

dhawan 2

அதனைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை விளாசி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான வார்னர் 128 ரன்களும், பின்ச் 110 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்தப் போட்டியில் அனைத்து விதங்களிலும் நாங்கள் மோசமாக விளையாடினோம் மேலும் போதுமான ரன்களை பேட்டிங்கில் குவிக்கவில்லை. ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் நம்மை எளிதாக தோற்கடித்து விடுவார்கள். இன்றைய போட்டி முழுவதும் ஆஸ்திரேலிய அணியை ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளது.

Warner

எந்த ஒரு வடிவ கிரிக்கெட்டிலும் பெரும் அனுபவம்தான் மற்ற வடிவங்களில் சிறப்பாக விளையாட ஒரு நம்பிக்கையை அளிக்கும். இந்த போட்டி மிகவும் முக்கியமானது சில சோதனைகள் இந்த போட்டியில் செய்து பார்த்துள்ளோம். ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் பின்ச் சிறப்பாக ஆடினார்கள் என்றும் கோலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -