Virat Kohli : இவர்கள் இருவர் இந்திய அணியின் பில்லர். எனவே நமக்கு தான் கப் – கோலி பெருமிதம்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Ravi

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் கோலி கூறியதாவது : இந்திய அணியின் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனவே அதனை உலகக்கோப்பை தொடரிலும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தூண்களாக இருப்பார்கள்.

chahal

இவர்கள் இருவரும் எதிரணி சிறப்பாக ஆடும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அவர்களை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தத்தை அளிப்பார்கள் என்றும் நம்புகிறேன். ஏனெனில் கடந்த பல தொடர்களாக அவர்கள் இந்திய அணிக்கு எதிராக ஆடும் அணிகளிடையே விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளனர். அவர்களது இந்த சிறப்பான பவுலிங் இந்த உலக கோப்பை தொடரிலும் பிரதிபலிக்கும் இவர்கள் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று கோலி கூறினார்.

Advertisement