சரியான நேரத்தில் ரிஸ்க் எடுத்தார். என்னை காட்டிலும் அவரே இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார் – கோலி பெருமிதம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டி.எல்.எஸ் முறைப்படி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலி 114 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Iyer-1

- Advertisement -

இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் ஆடிய விதம் அருமையாக இருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர் இந்த போட்டியை விளையாடத் தொடங்கினார். மேலும் போட்டியின் முக்கியமான இடத்தில் அவர் துணிச்சலாக வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர்களில் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.

அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது, மேலும் அவர் உறுதியாக ஆடினார். தொடர்ந்து அணிக்காக அவ்வாறு சிறப்பாக ஆடுவது நம்பிக்கை அளிக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடி அணியை வெற்றி பெறவே கவனம் செலுத்துவேன். என் மீது இருந்த அழுத்தத்தை ஸ்ரேயாஸ் அய்யர் புரிந்து கொண்டு அவர் ரிஸ்க் எடுத்தார். அவர் ரிஸ்க் எடுத்து விளையாடிய விதம் நெருக்கடியில் இருந்து இந்திய அணியை மீட்டது.

Iyer

உங்களுடைய ஆட்டம் என்ன நீங்கள் என்ன மாதிரியான வீரர் என்பதை புரிந்து கொண்டு ஆடுவது முக்கியம். அந்த வகையில் ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று சரியான பாதையில் விளையாடினார். அவருடைய இந்த ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. விக்கெட்டுகள் விழுந்த நிலையில் அவர் என்னுடன் அமைத்த பாட்னர்ஷிப் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது. அவர் தொடர்ந்து இவ்வாறு சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன் என்று ஷ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து கேப்டன் விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement