அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் இஷாந்த் சர்மாவை சேர்த்தது எதற்கு தெரியுமா ? – கோலி கொடுத்த விளக்கம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன்னர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் முடிந்த பிறகு இந்திய அணியின் மாற்றங்கள் குறித்து பேசிய கோலி கூறுகையில் :

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே விரும்பினோம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்வது ஒன்றும் பிரச்சனை இல்லை. முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் எங்களால் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க முடியும் என்று நம்புகிறேன். இன்றைய போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா விளையாடுகிறார்.

அது மட்டுமே இந்திய அணியில் நாங்கள் செய்யும் ஒரே மாற்றம் மேலும் அஷ்வினின் நீக்கம் குறித்து பேசிய கோலி கூறுகையில் : அணியில் எப்போதும் 12 ஆவது வீரராக அஷ்வின் இருப்பார். நாங்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. இருப்பினும் அணியின் பயன் குறித்து கணக்கில் கொண்டு இந்த மாற்றத்தை செய்துள்ளோம்.

IND

அணியில் உள்ள ஒவ்வொருவரும் வெற்றிக்காக பங்களிக்க விரும்புகின்றோம். அந்த வகையில் இன்று இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளரை விட நான்காவது வேகப்பந்து வீச்சாளர் எந்த ஒரு நேரத்திலும் விக்கெட்டை எடுத்துக்கொடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை கொடுக்க கொடுக்க முடியும்.

இதன் காரணமாக இன்று வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement