அறிமுக போட்டியிலே பயமின்றி விளையாடிய இவரின் ஆட்டமே வெற்றிக்கு காரணம் – விராட் கோலி புகழாரம்

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஜேசன் ராய் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 28 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

kohli 3

அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் அனைத்து வகையான செயல்பாடுகளும் திருப்தியாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு சிறப்பான அனுபவம் பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் மற்ற அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ishan 1

மொத்தத்தில் இந்த போட்டியில் பவுலிங் ஒரு முமென்டத்தை தந்தது. அதேபோன்று பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்சில் போது பந்து கொஞ்சம் நின்று வந்ததால் எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது. பேட்டிங்கில் இஷான் கிஷனை பாராட்டியே ஆகவேண்டும். அறிமுக போட்டியிலேயே அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் அபாரமான ஒன்று. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி விளையாடுவார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பயமின்றி விளையாடும் அவர் இந்தப் போட்டியிலும் தான் நன்றாக பந்தை அடித்து விளையாட முடியும் என்று கணித்து சிறப்பாக அடித்து விளையாடினார்.

ishan 2

இந்த போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததும் இஷான் கிஷன் மற்றும் நான் அமைத்த பார்ட்னர்ஷிப் அணிக்கு தேவையான ஒன்றாக அமைந்தது மீண்டும். வெற்றிக்கு திரும்பி இருப்பதும் இந்த வெற்றிக்கு பங்களிப்பு இருப்பதும் எனக்கு பெருமையான ஒன்று என்று கேப்டன் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement