இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி டி20 உலககோப்பைக்கு முன் இந்தியா 6 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது எனவே ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கேப்டன் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது :
நாங்கள் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளோம். இன்னும் அதிகமாகி போட்டிகள் இல்லை உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் அந்த இரண்டரை மாதம் எங்களை உலகக் கோப்பைக்கு தயார் செய்து கொள்ள மிகவும் உதவும். ஏனெனில் எந்த வகை கிரிக்கெட் ஆக இருந்தாலும் அதற்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வடிவத்திலும் நான் எவ்வாறு விளையாடுகிறேன் என்பது எனக்கு தெரியும். இது போன்ற விஷயங்களை கிரிக்கெட்டில் செயல்படுத்தினால் சிறந்த பழக்கம் உருவாகும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தயார் படுத்துவதில் ஐபிஎல் சரியான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



