கொஞ்சம் கூட கேப் இல்ல. அடுத்தமுறை இதுல கவனம் செலுத்துங்க. பி.சி.சி.ஐ யை மறைமுகமாக தாக்கிய கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த கோலி இடைவெளி இல்லாமல் இந்திய அணி கிரிக்கெட் விளையாடி வருவது குறித்தும், இந்திய அணியின் போட்டி அட்டவணை குறித்து பேசினார். இது குறித்து கோலி கூறுகையில் : இந்தியாவைவிட ஏழு மணி நேரம் முன்னதாக வித்தியாசம் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செய்து அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்வது என்பது கொஞ்சம் கடினமாக விடயம்தான்.

ஆனால் இதனை விரைவில் சரி செய்து சரி செய்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை கிரிக்கெட் பயணத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை முடித்து மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்த தொடருக்காக தயாராக வெகு குறைவான நாட்களே இருப்பதால் சற்று கடினம் வேண்டும் தெரிவித்திருந்தார்.

Ind

மேலும் இந்த ஆண்டு டி20 கிரிக்கெட் உலக கோப்பை நடைபெற உள்ளதால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் நாங்கள் அதற்கேற்றவாறு மாறி வருகிறோம் என்றும் கூறி மறைமுகமாக பிசிசிஐ யின் போட்டி அட்டவணையை தாக்கியதுபோல் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய கிரிக்கெட் நிகர்வாகத்தில் சற்று புகைச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement