இப்படிப்பட்ட டீமை வச்சிட்டு நம்மால் ஒன்னும் பண்ண முடியாது. கட்டாயம் இப்படி ஒரு வீரர் அணிக்கு தேவை – கோலி வெளிப்படை

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது சிட்னி. மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி 50 ஓவர்களின் முடிவில் 374 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 59 ரன்களும், ஆரோன் பின்ச் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சதமும் கிளன் மேக்ஸ்வெல் 19 பந்துகளுக்கு 45 ரன்களும் அடித்து குவித்தனர் .

finch

- Advertisement -

இந்திய அணி இந்த போட்டியில் 5 பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து ஆடியது. 5 வீரர்களும் முழுமையாக 10 ஓவர்கள் போட வேண்டியிருந்தது. ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை கூட மாற்றிக் கொடுக்க வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை. இதன் காரணமாக நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரது பந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.

அதிகபட்சமாக சாஹல் 89 ரன்கள் கொடுத்தார் இதன் காரணமாக இந்திய அணி தோற்க நேரிட்டது.
இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்…. நாங்கள் போட்டிக்கு தயாராக போதுமான நேரம் இருந்தது. இதன் காரணமாக வேறு காரணத்தையும் சொல்லி தப்ப நினைக்கவில்லை.

Chahal

நாங்கள் அதிக அளவில் டி20 போட்டியில் விளையாடிய பின்னர் முதலாக தலைமையில் இந்திய அணி 50 ஓவர் போட்டி இது எங்களது பாடி லாங்குவேஜ் போட்டியின் பாதிக்கு பின்னர் ஏமாற்றம் அளித்துவிட்டது. எங்களிடம் பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லை.ஒரு சில ஓவர்கள் அவர்களும் வீசி இருக்க வேண்டும்.

ind

துரதிஷ்டவசமாக ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர் வரமுடியாத நிலையில் இருக்கிறார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement