கடைசி சில ஓவர்கள் நான் மைதானத்தில் இருந்து வெளியேறியதற்கு இதுவே காரணம் – கோலி வெளிப்படை

ind
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்களை குவித்தது.

sky 2

- Advertisement -

அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குதித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 17வது ஓவரில் கேப்டன் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கடைசியில் இருந்த நான்கு ஓவர்களிலும் ரோகித் சர்மா தான் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

விராட்கோலி வெளியேறிய போது இந்திய அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ரோஹித் தனது சாமர்த்தியமான கேப்டன்சி மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். இந்நிலையில் போட்டியின் முக்கியமான நேரத்தில் டெத் ஓவர்களில் தான் ஏன் மைதானத்தை விட்டு வெளியேறினேன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி போட்டியின் முடிவில் தெரிவித்தார்.

thakur 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியின் போது ஒரு பந்தினை பிடிக்க நான் ஓடிச்சென்று பின்பு த்ரோ செய்யும்பொழுது எனக்கு அசௌகரியம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்படி அந்த வலி தொடரக் கூடாது எனவும் மேலும் அது தசை பிடிப்பாகவோ அல்லது காயமாகவோ மாறக்கூடாது என்பதற்காக நான் கடைசி சில ஓவர்களில் மைதானத்தை விட்டு வெளியேறினேன் என்று தெளிவான விளக்கத்தை அளித்தார்.

Rohith

மேலும் அடுத்த இரண்டு நாட்களில் இறுதிப்போட்டி உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாகவும் அதற்கு பதிலாக துணை கேப்டன் ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தினார் எனவும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement