நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக விராட் கோலியின் பேட்டிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங்கே தோல்விக்கு காரணம் என பலரும் பலவாறு தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி வரும்போதெல்லாம் பாராட்டாத பல முன்னாள் வீரர்கள், தோல்வி வந்தவுடன் விராட் கோலியின் மீது பாயத்தொடங்கினர். இவ்வாறு சென்று கொண்டிருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் நிலையில் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : நியூசிலாந்து போன்ற மைதானங்களில் நாம் ஆக்ரோஷமாக ஆடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும் .இதுதான் எங்கள் பாணி, இப்படித்தான் ஆடுவோம். நல்ல நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடும்போது சற்று ஆக்ரோஷமாக இருந்தால்தான் ரன்கள் குவிக்க முடியும். அதே நேரத்தில் விக்கெட்டுகளை இழப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் ஆடுவோம் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகியுள்ளார் விராட் கோலி.



