ராகுலிடம் நான் பேசிய வார்த்தைகளே எனது இந்த பேயாட்டத்திற்கு காரணம் – கோலி பேட்டி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

Rahul

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. துவக்க வீரரான ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்களையும், ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்தனர்.

அதன் பிறகு இந்திய அணி கேப்டன் கோலி வழக்கத்தைவிட மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளை சந்தித்த கோலி 70 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். கோலியின் இந்த வெறித்தனமான ஆட்டம் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Kohli

தொடர் நாயகனாக கோலியும், ஆட்டநாயகனாக ராகுலும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த கோலி இந்த ஆட்டம் குறித்து கூறியதாவது : இன்றைய போட்டி குறித்து நிறைய பேசி ஆகிவிட்டது. களத்தில் இறங்கிய உடன் திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம். வழக்கமான என்னுடைய பேட்டிங் இப்படி கிடையாது ஆனால் இன்றைக்கு அணுகு முறையை மாற்றி அமைக்க வாய்ப்பு கிடைத்தது. ராகுலிடம் சென்று நீ கடைசிவரை நின்று ஆட வேண்டும் என்றும் நான் கொஞ்சம் அடித்து ஆட போகிறேன் என்றும் கூறினேன்.

Rahul-1

எனக்கு திருமணமாகி இரண்டாம் ஆண்டு நிறைவடைந்த தினம் இன்று எனவே இது ஒரு சிறப்பான தினமாகும். அனைத்து வடிவங்களிலும் ரன் குவிக்க முடியும் என்பது என் தன்னம்பிக்கை முதலில் பேட் செய்வதால் அடிக்கலாமா ? வேண்டாமா ? என்ற தயக்கம் இருக்கும். ஆனால் இந்த போட்டியில் அது கொஞ்சம்கூட இல்லை எனவே என்னால் சிறப்பாக முடிந்தது அதனைப் போன்றே ராகுல் கடைசி வரை களத்தில் நின்று எனக்கு ஒத்துழைத்தது சிறப்பான விடயமாகும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement