சேஸிங்கில் நான் சிறப்பாக விளையாட இதுவே காரணம் – சக்ஸஸ் சீக்ரட் சொன்ன கோலி

Kohli
- Advertisement -

கிரிக்கெட் உலகில் சிறந்த பினிஷிங் யார் என்றால் அது தோனிதான். அதேபோல் சேசிங் கிங் யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது விராட் கோலிதான். கிட்டத்தட்ட விராட் கோலி இந்திய அணிக்கு அறிமுகமானதிலிருந்து 12 முறை இந்திய அணி 300க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐந்து முறை 350 ரன்களை விரட்டி வெற்றி பெற்றுள்ளது. இந்த அனைத்து வெற்றிலும் கோலியின் பங்கு அதிகம் என்றால் அது மிகையல்ல.

kohli 2

- Advertisement -

எப்போதும் இரண்டாவது பேட்டிங் பிடிப்பதில் விராட்கோலி வல்லவர். இப்படி அசுரத்தனமாக ஆடும் இவரது மனநிலை பேட்டிங்கின் போது எப்படி இருக்கும் என்று தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த ரகசியத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒரு இலக்கை விரட்டும் போது எனது மனநிலை மிகவும் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் எதிரணி வீரர்கள் யாராவது என்னை சீண்டி விட்டால் நான் ஆக்ரோசமாக அதிரடியாக ஆட துவங்கி விடுவேன். இந்திய அணி நான் சிறுவயதாக இருக்கும் போதெல்லாம் இலக்கை விரட்டுவதை விட்டுவிட்டால் அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் என்று நினைத்துக்கொள்வேன்.

Kohli-1

சேஸ் செய்யும்போது அதில் சாதகம் என்னவென்றால் நமக்கு இலக்கு என்ன என்பது தெரியும் வெற்றிதான் முக்கியம் என்று ஆட வேண்டும். இலக்கு 380 ஆக இருந்தாலும் எடுக்க முடியாது என்று ஒருபோதும் கைவிட மாட்டேன். ஆஸ்திரேலியாவில் ஹோபார்ட் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் 40 ஓவர்களில் 330 ரன்களை எடுத்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற நிலை வந்தது.

- Advertisement -

அப்போது நானும் ரெய்னாவும் இதில் 2 டி20 போட்டி உள்ளது என்று நினைத்து ஆடுவோம் என நினைத்து வெற்றியும் பெற்றோம் என்று கூறியுள்ளார் விராட்கோலி. அந்த போட்டியில் ரெய்னாவும் கோலியும் ருத்ர தாண்டவம் ஆடி அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

kohli 4

இதுவரை இந்திய அணிக்காக 248 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதில் 43 சதங்களை விளாசியுள்ளார். இதில் 21 சதங்கள் சேஸிங்கில் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தான் கோலி சேசிங் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்.

Advertisement