Virat Kohli : இந்திய அணியில் உள்ள யாரும் என்னை நம்பவில்லை – விராட் கோலி

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில்

kohli
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

kohli 1

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தனது பவுலிங் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு பேட்டிங் மட்டுமல்ல பவுலிங்கும் நன்றாக வரும் நான் டெல்லி பயிற்சி அகாடமியில் இருக்கும் போது முதலில் இங்கிலாந்து வீரர ஆண்டர்சன் பந்து வீச்சு முறை போல பந்துவீச வந்தேன். ஆனால், நான் கடந்து 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு வந்து வீசுதே முழுவதுமாக நிறுத்தி விட்டேன்.

kohli

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் அந்த தொடரின் போது நான் தோனியிடம் பந்துவீச ஆலோசனை கேட்டேன். அவரும் சரி நீங்கள் வந்து பந்து வீசுங்கள் என்று என்னிடம் கூறினார். நானும் சிறப்பாகவே பந்துவீச வேண்டும் என்று பந்தை கையில் எடுத்துக்கொண்டு பவுலிங் போட வந்து நிற்கையில் பவுண்டரி லைனில் இருந்து பும்ரா என்னை பார்த்து நீங்கள் பந்துவீச போகிறீர்களா காமெடி பண்ண வேண்டாம் இது சர்வதேச போட்டி என்று எச்சரித்தார்.

kohli 1

அவர் அப்படிக் கூறியதால் நான் பவுலிங்கை விட்டு மீண்டும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். அதன்பிறகு என் பவுலிங்கில் இந்திய அணியில் உள்ள யாரும் நம்பிக்கை வைக்காததால் என்னை அவர்கள் பந்துவீச்சில் நம்பவில்லை என்று தெளிவாக புரிந்து கொண்டேன். அதனால் அந்த நிகழ்விற்கு பின் நான் பவுலிங்கை முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன் என்று கோலி கூறினார். மிதவேகத்தில் பந்துவீசும் கோலி ஒருநாள் போட்டிகளில் 8 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement