வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது அதன்படி முதலில் விளையாடிய மழையின் காரணமாக போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அந்த 35 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 240 ரன்கள் குவித்தது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டி.எல்.எஸ் முறைப்படி 32.3 ஓவர்களில் 256 ரன்கள் குவித்து வெற்றி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.
போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது :என்னுடைய அடுத்தடுத்த சதத்தை பற்றிய கேள்விக்கு எனது பதில் இதுதான் நான் ஒருபோதும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைத்து களத்தில் இறங்குவதில்லை. என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்கவேண்டும். மேலும் அந்த ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நான் களம் இறங்குவேன்.
மேலும் இந்தியாவின் டாப் 3 வீரர்களில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதனால் ரோகித் தவான் அவுட் ஆன பிறகு நான் அந்த கடமையை எடுத்துக் கொண்டேன். எனக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டு நான் ஆடும் பொழுது ரன்கள் வருகின்றன. அதற்காக பெருமை கொள்கிறேன் என்றார். மேலும் சதத்தை விட இந்திய அணியின் வெற்றியே எனக்கு முக்கியம் என்றும் கூறினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கோலியின் 43 வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது