15-20 ரன்கள் அதிகமாக அடித்தாலும் அவர் இருக்கும் வரை அவங்கதான் ஜெயிச்சி இருப்பாங்க – கோலி வருத்தம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஐயர் 70 ரன்களும், பண்ட் 71 ரன்களும் குவித்தனர்.

Pant 2

- Advertisement -

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர்கள் ஹோப் ஆட்டமிழக்காமல் 102 ரன்களும், ஹெட்மையர் 139 ரன்கலும் குவித்தனர். ஆட்டநாயகனாக ஹெட்மையர் தேர்வானார்.

போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது : ஐயர் மற்றும் பண்ட் ஆகிய விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ரோஹித் மற்றும் என்னால் இந்த போட்டியில் சிறப்பாக ஆட முடியவில்லை. இளம் வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்தினார்கள்.

hetmyer

ஆறு பந்துவீச்சாளர்கள் உடன் போட்டியில் பங்கேற்பது போதும் என்று நினைத்தேன். ஆனால் மைதானம் எங்களது பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை சுழற்பந்து வீச்சிற்கு மைதானத்திற்கு ஒத்ழைத்தாலும் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் அவர்கள் மீது இருந்த அழுத்தத்தை விளக்கியது ஹெட்மையர் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது.

Hetmyer 1

நாங்கள் மேலும் 15 முதல் 20 ரன்கள் வரை அடித்திருந்தால் கூட போட்டியின் முடிவு மாதிரி இருக்காது வெஸ்ட் இண்டீஸ் அணியே வெற்றி பெற்றிருக்கும் என்கிற அளவிற்கு அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று கோலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement