களமிறங்கும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட நினைக்கிறார். அதனை சரியாகவும் செய்கிறார் – கோலி பாராட்டு

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.

pandya

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.

pandya

போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசும்போது ஹர்டிக் பாண்டியா குறித்து சில தகவல்களை கூறினார். அதில் அவர் கூறியதாவது : பாண்டியா தற்போது சிறப்பாக விளையாடி. வருகிறார் கடந்த 3 -4 போட்டிகளாக அவர் அருமையாக ஆடிவருகிறார். உண்மையில் ஒரு பேட்ஸ்மேன் எதனை வெளிப்படுத்த வேண்டுமோ அதனை அவர் சிறப்பாக செய்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் முதல் பந்தில் இருந்து அவர் அடித்து ஆட தயாராகி ஆடுகிறார். இன்னும் இரண்டு போட்டிகள் நமக்கு மீதமுள்ளன இந்த இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று கூறினார்.

Advertisement