இவங்க 2 பேரும் இறங்காமலே நாங்க 224 ரன்கள் குவிச்சது ரொம்ப ஹேப்பி. வெற்றிக்கு பின்னர் – கோலி பேட்டி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பை அளித்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதற்காக துவக்கத்திலிருந்தே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள், விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

rohith

- Advertisement -

மேலும் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் நான்காவது வீரராக இறங்கிய ஹார்டிக் பாண்டியா ஆகியோரும் அதிரடியாக 30 ரன்களுக்கு மேல் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதை தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் மலான் ஆகிய இருவர் களத்தில் இருக்கும் வரை ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தது. பட்லர் 52 ரன்களும், மலான் 68 ரன்கள் எடுத்து வெளியேற அதன் பின்னர் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கேப்டன் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது திறன் முழுவதையும் வெளிப்படுத்தி உள்ளோம். நாங்கள் எங்களது எதிர் அணிக்கு எதிராக எந்த ஒரு வாய்ப்பையும் உருவாக்கவில்லை.

Sky

இந்த போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் முதல் பேட்டியை போலவே ஆதிக்கம் செலுத்தினோம், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயரும் இறங்காமலேயே நாங்கள் 224 ரன்கள் அடித்து உள்ளது எங்கள் அணியின் பேட்டிங் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கோலி தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இன்று ரோஹித் தனது கிளாசிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது, இருவருமே நல்ல நம்பிக்கையை வைத்து செயல்பட்டோம்.

thakur

3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இறுதியில் பாண்டியா என அனைவரும் சரியான பணியை செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர் என கோலி பாராட்டிப் பேசினார். மேலும் பந்துவீச்சாளர்கள் குறித்துப் பேசுகையில் : இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் அபாரமாக செயல்பட்டார். அதேபோன்று ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஷர்துல் தாகூரின் மன உறுதி இப்போது அதிகரித்துள்ளது. பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தேவைப்படும் போது அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement