இப்படி விளையாடினால் எவ்ளோ ரன்கள் அடித்தாலும் ஜெயிக்கமுடியாது – கோலி வருத்தம்

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 54 ரன்கள் குவித்தார்.

ind vs wi

- Advertisement -

அதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : புள்ளிவிவரங்களின்படி பார்க்கும் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் போது சிறப்பாக விளையாடவில்லை. கடைசி 5 ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் 30 ரன்கள் வரையே கிடைத்தன இதுபோன்ற பேட்டிங் இருக்கக்கூடாது மேலும் பீல்டிங் சொதப்பல் இந்த போட்டியிலும் இருந்தது.

wi

இதுபோன்ற மோசமான பீல்டிங் இருந்தால் எவ்வளவு ரன்கள் இலக்காக இருந்தாலும் பத்தாது. பந்துவீச்சில் நாங்கள் முதல் 4 வரை சிறப்பாக வீசினாலும் சில கேட்சிகளை தவறிவிட்டோம். அதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த தவறுகளை சரிசெய்து கடைசி போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement