நான் இந்திய அணியின் கேப்டனாக மாற பெரிதும் உதவியவர் இவர்தான். அஷ்வினிடம் பகிர்ந்த கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

நவீன இந்திய அணியை கட்டமைத்ததில் மகேந்திர சிங் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அந்த புதிய இந்திய அணியின் ஒரு பெரிய பலம் வாய்ந்த வீரர்தான் விராட் கோலி. டோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.. அப்போது விராட் கோலிக்கு அந்தத் தலைமைத்துவம் கிடைத்தது.

Kohli-2

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்தார் மகேந்திர சிங் தோனி. அதனையும் ஏற்றுக்கொண்டார் விராட்கோலி. இவரது தலைமையில்தான் 2017 ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குச் சென்றது.

- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி வரை சென்றது. அதேபோல் டெஸ்ட் தொடரில் முதல் இடத்தையும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் தனக்கு கேப்டன்ஷிப் கிடைக்க தோனி எவ்வாறு உதவினார் என்பதைப் பற்றி பேசியுள்ளார் விராட் கோலி. ரவிசந்திரன் அஸ்வின்-உடன் நேரலையில் பேசிய அவர் கூறியதாவது..

Kohli

இந்திய அணியின் கேப்டனாக நான் மாறுவதற்கு பெரிதும் உதவியாக மகேந்திர சிங் தோனி. அவருடன் இணைந்து விளையாடிய போது கிரிக்கெட் தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டேன்.. அவரிடம் கற்றுக் கொண்டது கேப்டன் பொறுப்பில் இருந்து ஒருவர் செய்யவேண்டியதை கற்றுக்கொண்டேன். அவரை நீண்ட காலமாக கேப்டனாக பார்த்து வருகிறேன்.

Kohli

அவரின் முடிவுகள் பலவற்றை உதவியாகக் கொண்டு நானும் பல முடிவுகளை எடுத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி. எப்போதும் களத்திலும் சரி, மைதானத்தின் வெளியிலும் சரி கிரிக்கெட் குறித்த பல கருத்துக்களை அவர் என்னுடன் பரிமாறிக்கொள்வார். அவரின் ஆலோசனைகள் அனைத்தும் எனது கேப்டன்சிக்கு உதவுவதாக கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement