- Advertisement -
உலக கிரிக்கெட்

Virat Kohli : அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்கு தெரியும் – கோலி

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்கு நன்றாகவே தெரியும். அதன்படி அவர் மிடில் ஓவர்களில் ஆடிவருகிறார் சில நேரங்களில் அவர் நன்றாக ஆடாமல் இருக்கலாம் அந்த நேரத்தில் அவருடைய ஆட்டத்தைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர் சரியாக ஆடும் போது அதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை. கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தோனிக்கு நன்றாக தெரியும். 10 போட்டிகளில் 8 போட்டியில் அவர் இந்திய அணிக்கு சரியாக உதவியுள்ளார்.

மேலும் தோனி இதுபோன்ற பிட்ச்சில் எந்த ஸ்கோர் சிறந்தது என்ற தகவலை தருவார். இந்த பிட்ச்சில் 260 ரன்கள் போதும் என்று அவர் சொன்னால் நாங்கள் அதனைக் ஏற்றுக்கொள்வோம். 300 நன்கு அடிக்கவும் முயற்சிக்க மாட்டோம். 230 ரன்கள் அடிக்கவும் மாட்டோம். தோனி ஒரு லெஜன்ட் அவரின் பின்பு நாங்கள் எப்பொழுதும் இருப்போம் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்தவர் தோனி. இந்தப் போட்டியிலும் தோனி சிறப்பாக கடைசி ஓவர்களில் இந்திய அணி மீட்டு வந்தார் என்று தோனி குறித்து கோலி கூறினார்.

- Advertisement -
Published by