எந்த சூழ்நிலையாக இருந்தாலும் விளையாடித்தான் ஆகணும். ஆனால் இது நல்லதான்னு எனக்கு தெரியல – கோலி புலம்பல்

Kohli-4

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா இந்தியாவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சற்று சோர்வடைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மீண்டும் எப்போது கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதும் சந்தேகமாகியுள்ளது.

Ind

மேலும் இந்த வருடம் துவங்க இருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கரோனா வைரசின் தாக்கம் குறைந்து பின்னர் எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்றும் திட்டம் தீட்டி வருகிறது பிசிசிஐ. அப்படியே ஐபிஎல் தொடர் நடத்தினாலும் மூடிய மைதானத்தில் தான் நடத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்க்ப்படுவார்கள்.

இந்நிலையில் மூடிய ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் போட்டி நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்று விராட் கோலி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : காலியான மைதானங்களில் நாம் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ளத் தான் ஆக வேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே அதிகமாக யோசித்து விட்டேன். ஆனால் மற்ற வீரர்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று எனக்கு தெரியாது.

Practice

வெளிநாடுகளில் விளையாடும் போது அந்த நாட்டு ரசிகர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். அதற்கேற்ப நாம் உடனடியாக பழகிக்கொள்வோம். அதேபோலத்தான் தற்போது காலியான மைதானத்தில் விளையாடும் போது ரசிகர்கள் இல்லாத ஒரு நிலை இருக்கும் போது இதனை நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

- Advertisement -

இந்திய மண்ணில் நாம் ரசிகர்கள் இன்றி விளையாடும் போது நமக்கு உத்வேகம் இருக்காது. அதேபோன்று போட்டியின் முக்கிய கட்டத்தில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு நமக்கு கிடைக்காமல் போகும். இதனால் நம் ஆட்டத்தில் இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தும் இருப்பினும் இதனை கணக்கில் கொள்ளாது நான் போட்டியில் விளையாடித்தான் ஆக வேண்டும் என்று கோலி கூறினார்.

Ind

இருப்பினும் தற்போது உள்ள சூழ்நிலையில் எதனையும் உறுதியாக கூறமுடியாது. அதனால் தற்போது உள்ள நிலைமையை பி.சி.சி.ஐ கூர்மையாக கவனித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அதற்கு இன்னுமா சில மாதங்கள் ஆனாலும் அதற்காக காத்திருந்து நிலைமையினை மாற்றவும் பி.சி.சி.ஐ யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.