தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட கஷ்டமா இருக்கு. என்னுடைய ஓய்வு இந்த வருடத்தில் அறிவிப்பேன் – கோலி கொடுத்த ஷாக்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்திய அணி வீரர்கள் அதிக அளவில் போட்டிகளில் விளையாடுவதால் பணிச்சுமை மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகிறது என்று ஏற்கனவே வெளிப்படையாக பல தொடர்புகளின் முன்னர் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகள் 3 வடிவத்தில் அதிக போட்டிகள் இருப்பதாகவும் அதன் பிறகு ஏதாவது ஒரு தொடரில் ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பது சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Kohli

கோலி மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : அடுத்த 3 ஆண்டுகளில் 2 டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்கள் வருகின்றன. இந்த மூன்று தொடர்களும் மிக முக்கியமானவை. இதனால் நான் இந்த மூன்று உலகக்கோப்பை பற்றி அதிக அளவில் யோசிக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வேறு மாதிரியான உரையாடலில் நாம் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் ஏதாவது ஒரு வகையான கிரிக்கெட் போட்டிக்கு அவர் ஓய்வு கொடுக்க நினைத்து இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அவர் கூறும்போது : நான் கிரிக்கெட் விளையாட வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆண்டுக்கு 300 நாட்கள் கிரிக்கெட் மைதானத்தில் செலவிடுகிறேன். அதாவது பயணம், பயிற்சி, அமர்வு மற்றும் போட்டி என எல்லாத்தையும் சேர்த்து தான் கூறுகிறேன். இவ்வாறு விளையாடுவதும் உடலைப் பதம் பார்க்கும் மேலும் இதுகுறித்து வீரர்களும் யோசிக்காமல் இல்லை.

Kohli

இவை அனைத்துமே அவசியம் என்பதால் நாங்கள் விளையாடுகிறோம். மேலும் அனைத்து வடிவமான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் இது குறித்து அதிகம் யோசிக்க வேண்டும் மேலும் அதிகமாக தேவை அதிகம் உள்ளது. எனவே அவர்களுக்கு ஓய்வு அவசியம் 34-35 வயதில் உடல் தாங்காது என்ற நிலை வரும் பொழுது நாம் வேறு மாதிரியான உரையாடலில் ஈடுபடுவோம்.

Kohli

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எனக்கு எந்த சிக்கலும் இல்லை ஆனால் அதற்கு பிறகு தான் விளையாடுவதில் சிக்கல் ஏற்படும் என்று மறைமுகமாக கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலி நிச்சயம் 2023 உலககோப்பைக்கு பிறகு ஏதாவது ஒரு வடிவில் ஓய்வை அறிவிக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Advertisement