“குடியுரிமை சட்ட திருத்தம்” குறித்த கேள்விக்கு சாதூரியமான பதில் அளித்த கோலி – என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Kohli
- Advertisement -

நாடு முழுவதும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம் முதன்முதலில் அசாம் மாநிலத்தில் தான் தொடங்கியது. அசாம் மாநிலத்தில் (CAA) மற்றும் (NRC)க்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அசாமில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில கிரிக்கெட் நிர்வாகம் விதித்துள்ளது. மேலும் சிஏஏ குறித்து எந்த ஒரு பதாகைகளும், பேனர்களும் போஸ்டர்களும் இடம்பெறக் கூடாது என்பதை கவனத்தில் வைத்துள்ள மைதானம் நிர்வாகம் ஏகப்பட்ட விதிமுறைகளை வகுத்து ரசிகர்களை வரையறைக்குள் வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தற்போது கேப்டன் கோலியிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் கோலி பேசியபோது : இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால் அதுகுறித்து நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சிஏஏ என்பதன் பொருள் எனக்கு தெரியும்.

Kohli-1

ஆனால் அது குறித்த புரிதல் முழுவதுமாக என்னிடம் இல்லை எந்த ஒரு விடயத்தையும் பேசும் முன் அது குறித்த புரிதல் முழுவதுமாக இருந்தால் மட்டுமே கருத்து கூற விரும்புகிறேன். அதனால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கருத்தை என்னால் தெரிவிக்க முடியாது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. கோலியின் இந்த சாதூர்யமான பதில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement