இவர்களை அணியில் சேர்க்காததுக்கு இதுதான் காரணம் – சரியான காரணத்தை சொன்ன கோலி

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

pant 2

இந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த கோலி இடம் முக்கியமான வீரர்களை வெளியில் அமர்த்திவிட்டு குல்தீப் யாதவ் மற்றும் சுந்தரை அணியில் எடுக்க காரணம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கோலி பதிலளிக்கையில் : இந்த டி20 போட்டியில் சுந்தரையும், குல்தீப் யாதவையும் தேர்வு செய்ததற்கு காரணம் போட்டியின் சூழ்நிலை காரணமாகத்தான் அணியில் இடம் பிடித்தனர்.

- Advertisement -

இந்திய அணியின் தேர்வு எப்போதும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்பதை நாங்கள் பலமுறை செய்துள்ளோம். அதை தான் இன்றும் செய்துள்ளேன் குல்தீப் மற்றும் வாஷிங்டன் ஆகியோர் இலங்கை அணியின் இடக்கை பேட்ஸ்மேன்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கு எதிராக இவர்கள் இருவரும் பந்தை வெளியே வீசுவார்கள் என்பதால் அவர்களை குறிப்பாக இந்த அணியில் எடுத்தோம்.

மேலும் வலக்கை பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் ஜடேஜாவும், சாஹலும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர்களாக இருந்திருப்பார்கள். ஒரு கேப்டனாக எனக்கு ஐந்து மேற்பட்ட பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் அணி வீரர்களுக்கு இடையே இந்த ஆரோக்கியமான போட்டி நல்லதுதான் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement