கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனும் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல இந்திய வீரர்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

நேற்று காலை விராட் கோலியை வைத்து பேட்டி எடுத்தார். இந்த இருவருக்கும் இடையிலான பேச்சு ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இந்த உரையாடலின்போது விராட் கோலியும், கெவின் பீட்டர்சனும் பல தெரியாத விஷயங்களை பற்றி பேசினார். இதில் விராட் கோலி தனது கிரிக்கெட் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் கெவின் பீட்டர்சன் நீங்கள் யாருடன் பேட்டிங் செய்வதை விரும்புகிறீர்கள் என்ற கேள்வியினை எழுப்பினார். அதற்கு பதிலளித்த கோலி கூறியதாவது : எனக்கு களத்தில் விளையாடும் போது ரன்களை குவிக்கும் அளவிற்கு விக்கெட்டுகளுக்கு இடையே ஒன்றிரண்டு ரன்களை ஓடுவது பிடிக்கும் என்று கூறினார்.

மேலும் அவ்வாறு ரன்னிங் ஓடவும் விளையாடவும் சிறந்த ஜோடி என்றால் இந்திய அணியை பொறுத்தவரை தோனியுடன் பேட்டிங் செய்யவே எனக்கு பிடிக்கும். நாங்கள் இருவரும் பேட்டிங் செய்யும்போது அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், எங்களுக்கு இடையே ரன்னிங்கில் நல்ல புரிதல் இருக்கும்.
அதேபோன்று பெங்களூரு அணிக்காக விளையாடும் போது ஏ.பி.டிவில்லியர்ஸ் உடன் விளையாட மிகவும் இவர்கள் இருவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்டில் என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரே எனக்கு சிறந்த ஜோடியாக கருதுவதாக பீட்டர்சனிடம் கோலி கூறினார்.

அவர்கள் இருவரது இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு சுவாரசிய விடயங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



