கடந்த இரண்டு போட்டிகளில் நான் இதனை கற்றுக்கொண்டது புதிதாக இருந்தது. வெற்றி குறித்து – கோலி பெருமிதம்

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார்.

Thakur 1

- Advertisement -

அதன்பிறகு 166 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 165 ரன்கள் அடித்து போட்டி டை ஆனது. அதிகபட்சமாக துவக்கவீரர் முன்ரோ 64 ரன்கள் குவித்தார். சைபர்ட் 57 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ரன்அவுட் ஆனார். மேலும் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை வீசிய தாகூர் சிறப்பாக வீசி போட்டியை டை ஆக்கினார். கடைசி ஓவரில் 2 ரன்அவுட்களுடன் சேர்த்து 4 விக்கெட் வீழ்ந்தது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி ராகுல் 10 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேற மீண்டும் பதட்டம் தொற்றி கொண்டது. பிறகு கோலி வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது.

pandey 1

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்தப் போட்டியின் மூலம் புதிதாக சில விடயங்களை கற்றுக் கொண்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து ஆட்டத்தை கவனிக்கும் போது சில விடயங்கள் புலப்படுகிறது. அதை சரியாக கணித்து களத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் மீண்டும் வெற்றிக்கு முடியும் என்பதை இந்த போட்டி எனக்கு கற்றுக்கொடுத்தது.

- Advertisement -

Thakur

ரசிகர்களுக்கு இதைவிட சிறந்த போட்டி கிடைக்குமா என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பான ஆட்டம் நடைபெற்று வருகிறது. நாங்கள் இதற்கு முன்னர் வரை சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. ஆனால் தற்போது அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஓவர்களை விளையாடி உள்ளோம் என்ற உணர்வு நிச்சயம் சிறப்பாக இருக்கிறது. ஒரு அணியாக இந்திய அணி செயல்பாடு மிகவும் திருப்தியாக இருக்கிறது.

Kohli

நான் இதுவரை சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது இந்த முறை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கோலி கூறினார். மேலும் நாங்கள் மைதானத்தை சரியாக கிடைக்கவில்லை. பிறகு சூப்பர் ஓவரில் ராகுல் முதல் சிக்சர் அடித்து துவங்கினார். அதுவே வெற்றிக்கு கொண்டு சென்றது. இந்த போட்டியை நாங்கள் விளையாடிய சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருந்தது. எதிர் அணியம் அருமையாக விளையாடியது. இருப்பினும் இது எங்களுடைய நாளாக அமைந்து என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement