உலகக்கோப்பையை ஜெயிச்சதும் சச்சினை தோளில் சுமந்து மைதானத்தை சுற்ற இதுவே காரணம் – விராட் கோலி ஓபன் டாக்

sachin

2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றிக்கு கம்பீர், தோனி, யுவராஜ் மற்றும் ஜாஹீர் என அனைவரும் வித்திட்டிருந்தனர். இருப்பினும் இந்த தொடர் முழுவதும் சீனியர் வீரரான சச்சின் சிறப்பாக விளையாடி வந்தார்.

2011-final

மேலும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாக மிகுதியில் வீரர்கள் சச்சினை தோளில் சுமந்து மைதானம் முழுவதும் வலம் வந்தனர். இந்நிகழ்வு ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலுடன் “ஓபன் நெகட்ஸ் வித் மாயங்க்” எனும் ஆன்லைன் வீடியோ சேட் மூலமாக இது குறித்து பேசிய கோலி கூறுகையில் : இந்தியா வெற்றி பெற்றதற்கு பிறகு அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களோடு நாங்களும் வெற்றியை கொண்டாட துவங்கினோம்.

yuvidhoni

என்னைப் போலவே அனைவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இருந்தாலும் எல்லோரும் ஒட்டு மொத்த கவனமும் சச்சின் மீது தான் இருந்தது. ஏனெனில் அந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அவருக்கு கோப்பையை வெல்ல கிடைத்த கடைசி வாய்ப்பு. அதற்கு முன்னர் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ள மாபெரும் வீரர் அவர்.

- Advertisement -

Sachin 1

அவருக்கு இந்த வெற்றியை பரிசாக தருவதற்காக நாங்கள் அவரை தோளில் சுமந்தோம் மேலும் சீனியரான அவருக்கு ஜூனியர் நாங்கள் அனைவரும் சேர்ந்து கொடுக்கும் கௌரவம் அது என்று கோலி தெரிவித்தார்.