ஒற்றை கையால் அற்புதமாக பிரமிக்கும் வகையில் கேட்ச் பிடித்த கோலி – வைரல் வீடியோ

Kohli

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

நேற்றைய போட்டியில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டிகாக் அரைசதம் கடந்த பின்னர் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சைனி வீசிய அந்த ஸ்லோ பாலில் ஸ்ட்ரெய்ட் திசையில் தூக்கி அடிக்க அங்கு உள் வட்டத்தில் நின்று கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் கோலி மிக விரைவாக ஓடி வந்து கடைசி நிமிடத்தில் டைவ் செய்து அந்த கேட்சை ஒரே கையால் லாவகமாக பிடித்தார்.

பின்னர் பந்தை தூக்கிப்போட்டு விக்கெட் கொண்டாட்டத்தை கொண்டாட ஆரம்பித்தார். கோலி பிடித்த கேட்ச் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சிறப்பான கேட்ச் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து பிரமிக்கவைக்கும் கையில் கேட்ச் பிடித்த கோலிக்கு வாழ்த்துக்கள் என்று அதிக அளவில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.