வெற்றிக்கான பேச்சை துவங்க 5 நொடிகள் எடுத்துக்கொண்ட கோலி – காரணம் இதுதான்

Cup
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்தது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Ishanth-2

- Advertisement -

இந்த போட்டி முடிந்து பேசிய கேப்டன் கோலி கூறியதாவது : வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியில் இல்லை என்று நினைத்தால் அது ஒரு தவறான விடயமாகும். தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளைக் எடுக்கும் திறமை உள்ளவர்களாக தெரிகின்றனர்.

மேலும் அணியில் இருக்கும் அனைத்தும் வீரர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதேபோல் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகின்றனர். எங்கள் அணியில் உள்ள அனைவரும் இதுபோன்று ஈடுபாடு காட்டுவது ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே இந்த தொடரின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.

Kohli

இந்த வெற்றிக்கான பேச்சை துவங்க கோலி 5 நொடிகள் வரை எடுத்துக்கொண்டார். ஏனெனில் கொல்கத்தா மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை அந்த அளவு ஆரவாரமாக கொண்டாடினர். கோலி பேச்சை துவங்கும்முன் தங்களது மகிழ்ச்சியை கூச்சலில் தெரிவித்ததோடு கரகோஷங்களையும் எழுப்பினர். அந்த அளவு ரசிகர்கள் மகிழ்ச்சி களிப்பில் இருந்தனர். மேலும் கோப்பையில் கையில் வாங்கிய கோலி மைதானம் முழுவதும் வந்து ரசிகர்கள் இருக்கும் அனைத்து மூளைக்கும் சென்று அவர்களுடன் தங்களது வெற்றியை பகிர்ந்து கொண்டார் குறிப்பிடத்தக்கது.

Advertisement