7 ஆண்டுக்கு பிறகு கோலிக்கு நடந்த சோகம்..! நடுவரின் தீர்ப்பை கேக்காமல் நடையை கட்டினார்..! – வீடியோ உள்ளே

stumping
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி குறுகிய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் கோலி 7 வருடங்களாக செய்யாத தவறை நேற்று (ஜூலை 12) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் செய்துவிட்டார்.
kohli
தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோலி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார். இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதை தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேற்று (ஜுலை 12) நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 82 பந்துகளில் 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.


கோலி 75 ரன்களை குவிந்திருந்த போது ஆதில் ரஷித் வீசிய பந்தை கொஞ்சம் முன்னே சென்று விளையாடிய கோலியை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார். அது அவுட்டா, இல்லையா என்று மூன்றாவது நடுவரை கேட்பதற்குள், அது அவுட் என்று உணர்ந்த கோலி ஆடுகளத்தைவிட்டு வெளியேறினார். இதன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்டம்பிங் மூலம் கோலி தனது விக்கெட்டை இந்த போட்டியில் விட்டுக்கொடுத்துள்ளார்.

Advertisement