ஐ.சி.சி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு. அசைக்க முடியாத இடத்தில் கோலி – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இந்திய அணி வாஷ் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடருக்கு பிறகு ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த தர வரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வழக்கம்போல் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 869 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் துவக்க வீரர் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இருக்கிறார்.

அவரை அடுத்து மூன்றாவது வீரராக பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் 829 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ராஸ் டெய்லர் நான்காவது இடத்திலும், அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 8வது இடத்திலும் உள்ளது.

Rohith-2

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் பும்ரா தனது முதலிடத்தை இழந்து 2 ஆவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 7 ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement