ஓய்வுக்கு முன்னர் தோனிக்கு அடுத்து கோலிக்கு கிடைக்க இருக்கும் மிகப்பெரிய கவுரவம் – செம தகவல் இதோ

Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெளியேறியபோது கேப்டனை மாற்ற வேண்டும் என்று பலரும் கூறினாலும் இந்திய அணியின் நிர்வாகம் கோலின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் கோலியை கேப்டனாக தொடரவைத்தது.

Kohli-1

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி கிரிக்கெட்டில் செய்த சாதனைக்காக டெல்லி கிரிக்கெட் வாரியம் விராத் கோலியை கவுரவிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பொதுவாக கிரிக்கெட்டில் சாதனை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் சொந்த ஊர் மைதானங்களில் அவர்களின் பெயர் ஒரு பகுதிக்கு சூட்டுவது வழக்கம்.

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அப்படி சூட்டப்பட்டுள்ளன அதுவும் அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இப்படி பெயர் சூட்டப்படும். ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இப்படி ஒரு வீரனின் பெயரை வைப்பது மிகவும் அரிது. அந்த பெருமை ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனிக்கு உள்ளது. ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு பகுதிக்கு தோனி பெயரிடப்பட்டுள்ளது.

Feroza

அதன்பிறகு தற்போது கோலிக்கு பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் சர்மா கூறியதாவது : சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் வியப்புக்குரிய பங்களிப்பு பெருமை அளிக்கிறது. அவரின் சாதனை கௌரவிக்கும் விதமாக நாங்கள் மைதானத்தின் ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை சூட்ட உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கு முன்னர் டெல்லி மைதானத்திற்கு பிஷன் சிங் பேடி அமர்நாத் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement