இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 360 களுக்கும் மேலாக முன்னிலை பெற்று பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் இளம் துவக்க வீரராக சுப்மன் கில்லை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திட்டியது தற்போது சமூக வலைதளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி கொண்டிருக்கும்போது 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பீல்டர்களை மிக நெருக்கமாக செட் செய்து கோலி கேப்டன்சி செய்து கொண்டிருந்தார். விக்கெட் கீப்பர், 2 ஸ்லிப் பீல்டர்கள், சில்லி பாயிண்ட் என அருகருகே பீல்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கோலியும் ஹெல்மட்டை மாட்டி கொண்டு பேட்ஸ்மேனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
அதில் ஒரு ஓவருக்கு இடையில் இடைவெளியின் போது தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கில் பிடிப்பார் என்று நினைத்து அதை தூக்கி வீசினார். ஆனால் அதனை கவனிக்காமல் இருந்த கில் ஹெல்மெட்டை பிடிக்காமல் விட்டுவிட்டார். இதனை கில் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஹெல்மெட் நேராக பீச்சில் விழுந்தது.
If Steve Smith did this there would be calls for him to be banned @tomvruss @MattWilcox73 No ? pic.twitter.com/gLFBUCM9vV
— Stephen Potter (@S55JNP) February 14, 2021
போட்டியின் போது ஹெல்மெட்டை பிட்சில் போடுவது என்பது விதிப்படி தவறானது. இதனால் கில் மீது கோபம் அடைந்தார். மேலும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்பது போன்று கில்லை பார்த்து கோபமாக கோலி கேள்வி கேட்டார். இதையடுத்து உடனே அங்கிருந்த ஹெல்மட்டை கில் எடுத்தார் இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.