இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்தடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை எழுந்துள்ளதால் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
Stfu. This is the @imVkohli we all know 🤫❤️ #INDvsNZTestCricket #NZvsIND #Kohli #ViratKohli pic.twitter.com/MXaps2RX5L
— Adish Shetty (@AdishShetty18) March 1, 2020
அதுமட்டுமில்லாமல் தற்போது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல கோலி செய்த செயல் ஒன்று வைரலாகி வருகிறது. நியூசிலாந்து வீரர் ஆட்டமிழந்த உடனே ரசிகர்களை நோக்கி ஆபாச வார்த்தைகளை பேசியது போன்றும் வாயை மூடும் படி சைகை செய்துள்ளா.ர் இதனை கண்ட ரசிகர்கள் இவருக்கு ஐசிசி ஸ்போர்ட்ஸ் மேன் ஆப் தி இயர் விருது வேற வழங்கியுள்ளது என்று கிண்டல் செய்துள்ளனர்.
மேலும் அதெல்லாம் இவருக்கு எதற்கு ? இந்த செயலைப் பாருங்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார் என்று கருத்துக்களை பதிந்து இந்த வீடியோவையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலியின் இந்த மோசமான செயலுக்கு ஐ.சி.சி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்



