யாரையும் மதிக்குறது இல்ல. ஆட்டிட்யூட் காட்டறாரு. கோலி குறித்து – பி.சி.சி.ஐ-யிடம் போட்டுக்கொடுத்த வீரர்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். என்னதான் சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் அவரால் ஐசிசி நடத்தும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்ற பெரிய குறை இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி இவரது கேப்டன்ஷிப் குறித்த விவாதமும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக கோலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

kohli 1

இந்த செய்தி வெளியானதிலிருந்து கோலி குறித்து ஏகப்பட்ட தகவல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் டி20 கேப்டனாக கோலி பதவி விலகியதை தொடர்ந்து ரோகித் சர்மா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு பின்னால் உள்ள பெரிய பிரச்சனை தற்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி விராட் கோலி கேப்டன்சியில் பெரிய அழுத்தத்தை சந்திப்பதால் அவரால் பேட்டிங் பார்மை தொடர முடியவில்லை என்றும் இதனால் அணியில் உள்ள வீரர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அணியில் யார் பேச்சையும் கேட்காமல் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று கூறப்படுகிறது.

Shastri

அது மட்டுமின்றி பயிற்சியின்போது பயிற்சியாளர்கள் ஏதாவது கோலியின் பேட்டிங்கில் ஏதாவது மாற்றத்தை சொன்னால் “என்னை குழப்பாமல் சென்று விடுங்கள்” என்று பயிற்சியாளர்கள் குழுவையும் கோலி அவமதித்ததாக தெரிகிறது. இப்படி யாரையும் மதிக்காமல் ஆட்டிட்யூட் காட்டியதை இந்திய அணியின் வீரர் ஒருவர் பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷாவிடம் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

kohli

இதன் காரணமாகவே தற்போது கோலியின் ஆக்ரோஷத்தை குறைக்க தோனி டி20 அணியின் ஆலோசகராக கொண்டுவரப்பட்டதாகவும் இந்த சில பல பிரச்சினைகள் காரணமாகவே கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement