பிங்க்பால் டெஸ்ட் : பென் ஸ்டோக்ஸ் செய்த செயலால் கடுப்பாகி வார்த்தைகளை உதிர்த்த கோலி – வைரலாகும் வீடியோ

Stokes
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

cup

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி குவித்த குறைந்தபட்ச ஸ்கோர்களில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

axar1

இந்நிலையில் இந்த போட்டியின்போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவருடன் கோலி ஆக்ரோஷமாக விவாதித்த ஒரு உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அஸ்வின் பந்து வீசிக் கொண்டிருந்த போது ஒரு ஓவரின் இடையே ஸ்டோக்ஸ் பந்தை எதிர் கொள்வதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டார். மேலும் அஸ்வின் பந்து வீச வந்து நின்று தயாரானபோது மீண்டும் பந்துவீச விடாத ஸ்டோக்ஸ் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

மேலும் கையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக தான் பந்துகளை எதிர்கொண்ட தாமதித்ததாக ஸ்டோக்ஸ் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் பந்துகளை வீச விடாமல் தாமதப்படுத்தியதை பார்த்த கோலி அவரிடம் நேராக வந்து “கமான் யார் பென்” என்ன உங்களுக்கு பிரச்சனை விளையாடுங்கள் என்பது போல கூறினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement