3ஆவது டி20 போட்டி : ஷர்துல் தாகூர் மீது கோபப்பட்டு வார்த்தைகளை உதிர்த்த கோலி – நடந்தது என்ன ?

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால் அதன் பின்னர் இந்திய அணியால் பெரிய ரன் குவிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 77 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ரிஷப் பண்ட் ஒருபுறம் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி இறுதியில் ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் ஆன 156 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியை இந்த ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்த இந்திய அணிக்கு பட்லரின் அதிரடியான பேட்டிங் அதிர்ச்சியாக அமைந்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 83 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் அவருக்கு உறுதுணையாக விளையாடிய பேர்ஸ்டோ 40 ரன்களை குவித்தார். இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஷர்துல் தாகூர் மீது கோபப்பட்டு சில வார்த்தைகளை உதிர்த்து மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

eng

இந்த சம்பவம் 12வது ஓவரின் போது நடைபெற்றது. அப்போது இங்கிலாந்து அணி 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தபோது சாஹல் வீசிய ஒரு பந்தை அடித்துவிட்டு பட்லர் 2 ரன்னுக்கு ஓடினார். அந்த பந்து ஷர்துல் தாகூர் கைக்கு சென்றதும் அதை எடுத்து அவர் சரியாக த்ரோ செய்திருந்தால் பட்லர் ஆட்டமிழந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி இருக்கும். ஆனால் ஷர்துல் தாகூர் அடித்த தவறான த்ரோ மூலம் பட்லர் அந்த ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்தார்.

இதனால் கோபமடைந்த விராட் கோலி ஷர்துல் தாகூரை பார்த்து சில வார்த்தைகளை கோபத்தில் உதித்தார். இது மைதானத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் 4வது போட்டி நாளை 18ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement