தோனியின் கஷ்டம் என்னனு அந்த தருணத்தில் தான் புரிந்துகொண்டேன் – தோனியுடனான உறவு குறித்து மனம்திறந்த கோலி

Dhoni

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடியவர். அவர் ஒரு வீரராக மட்டும் இந்திய அணியில் இருந்து விடவில்லை. ஒரு கேப்டனாக ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆக முழுநேர விக்கெட் கீப்பராக பல ஆண்டுகாலம் உழைத்தவர். அதே நேரத்தில் எத்தனை வேலைகள் செய்தாலும் வெகு சில நேரங்களில் மட்டுமே காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார். பெரிதாக காயமடைந்தது இல்லை.

Dhoni

மேலும் சிரமமான விக்கெட் கீப்பர் பணியை நாள் முழுவதும் செய்து விட்டு திடீரென நாள் முழுவதும் 30 ஓவர்கள் பேட்டிங்கும் பிடித்துள்ளார். அந்த அளவிற்கு கடினமான வேலைகளை செய்தவர் தோனி . இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வாலுடன் ஒரு நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்

அப்போது இருவரும் ஏதேச்சையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேச நேரிட்டது. தொடர்ந்து பேசிய விராட் கோலி தோனி குறித்தான பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக ஆடுகளத்தில் ஒரு கீப்பராக இருப்பது எவ்வளவு கடினம் என்றும் தோனி எத்தனை வருடங்கள் அந்த பணியை எளிதாக எப்படி செய்தார் என்றும் பேசி இருந்தார். அவர் கூறுகையில்…

kohli

2015ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 44 ஓவர் வரை தோனி கீப்பிங் செய்து கொண்டிருந்தவர் திடீரென என்னை அழைத்து கையுறைகளை கொடுத்துவிட்டு டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று விட்டார் தோனி அப்போது உமேஷ் யாதவ் பந்துவீசி கொண்டிருந்தார். பந்து எனது முகத்தில் பட்டு விடுமோ என்ற பயத்தில் ஹெல்மெட் அணிந்து கீப்பிங் செய்ய நினைத்தேன். ஆனால் மைதானத்தில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் ஹெல்மட் அணியவில்லை.

- Advertisement -

ஒரு சில ஓவர்கள் மட்டுமே நான் கீப்பிங் செய்தேன். அதுவே எனக்கு பயத்தையும் ஒரு தேவையில்லாத இடத்தில் நான் நிற்பதை போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. ஆனால் தோனி எத்தனை வருடங்கள் அந்த விஷயத்தை எப்படி செய்தார் என்று எனக்கு தற்போது தெரியவில்லை. இவ்வளவு கடினமாக தான் ஆடுகளத்தில் அவர் நின்று இருந்திருக்கிறார் என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது என்று தெரிவித்திருக்கிறார் கோலி.

kohli 1

தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையேயான பந்தம் மிக நீண்டது விராட் கோலி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது உடனடியாக அவருக்கு உதவி கரம் நீட்டியவர் தோனி. அதே நேரத்தில் கேப்டன்சி தொடர்பான பல நுணுக்கங்களை தோனியிடம் இருந்து தான் தான் கற்றுக் கொண்டதாக விராட் கோலியை பலமுறை கூறியிருக்கிறார்.