ஹேப்பி “பர்த்டே மஹி பாய்” தனது கேப்டனுடன் இருக்கும் 3 புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய – கிங் கோலி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருரான தோனி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற சிறப்பு ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Dhoni-4

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் மூன்று புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் கோலி குறிப்பிட்டதாவது : பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் மஹி(பாய்).. உங்களுக்கு உடல்நலமும், மகிழ்ச்சியும் மிகுந்து எப்போதும் நலமாக வாழ வாழ்த்துக்கள் என்று கோலி தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலியின் இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டுகள் மூலம் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கோலி மட்டுமின்றி ரெய்னா, ரோஹித், ஜாதவ், ஜடேஜா போன்ற பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement