இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்க்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கூறி இதுவரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11867 ரன்கள் குவித்துள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களை குவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி 82 டி20 போட்டிகளில் விளையாடி 2794 ரன்கள் குவித்துள்ளார். இப்படி தொடர்ந்து
சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கோலி ஐசிசி கோப்பைகளை கைப்பற்றாதது மட்டுமே குறையாக உள்ளது. அதை தவிர மற்றபடி கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை உலக கோப்பை தொடரை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் இருந்த கோலி அண்ட் கோ கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளது.
This father’s day, I urge you all to be grateful for the love of your father but always look for your own path to move forward in life. You’ll never have to look behind because they’re always watching over you whether they’re physically there or not. Happy father’s day 😊💛 pic.twitter.com/u87hHWL03b
— Virat Kohli (@imVkohli) June 21, 2020
இந்நிலையில் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தனது அப்பாவுடன் இருக்கும் அறிய புகைப்படத்தை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பழைய பேட்டி ஒன்றில் கோலி தன் தந்தை இறந்த அடுத்த நாளே நடைபெற்ற ரஞ்சி போட்டிகளில் தான் விளையாடியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கோலி கிரிக்கெட் மீது அர்ப்பணிப்பு கொண்டவராக உள்ளதாலே இன்று அவர் உச்சத்தில் இருப்பதாக அனைவரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.