பெங்களூருவில் டிராவிட்டை சந்தித்த கோலி காரணம் இதுதான். புகைப்படத்தை பகிர்ந்த கோலி – விவரம் இதோ

dravid
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அந்த மைதானத்தில் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது டிராவிட் கோலியை சந்தித்து சிறிது நேரம் இந்திய அணி குறித்தும், விராட் கோலியின் ஆட்டம் குறித்ததும் மற்றும் இந்திய அணியின் முன்னேற்றம் குறித்தும் சிறிது நேரம் கலந்துரையாடினார். டிராவிட் உடனான இந்த சந்திப்பை புகைப்படம் மூலம் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement