மீண்டும் வருகிறாரா தோனி ? கோலி பதிவிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் – ரசிகர்கள் தவிப்பு

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் தற்போது வரை ஒதுக்கப்பட்டு வருகிறார். மேலும் இந்த தொடரில் இடம் பெறுவார், அந்த தொடரில் இடம் பெறுவார் என்று தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்து அணியிலிருந்து தோனி நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனியுடன் பயிற்சி செய்யும் ஒரு பழைய போட்டோவை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் புகைப்படமாக தற்போது மாறி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இது போன்று ஒரு முறை தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கோலி பதிவிட்ட போது அந்த விடயம் பெரிய பேசு பொருளாக மாறியது. மேலும் தோனி ஓய்வு பெறப் போகிறாரா ? என்ற கேள்வி கூட அப்போது எழுந்தது.

இந்நிலையில் கோலி தற்போது பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தில் “பார்ட்னர்ஸ் இன் க்ரைம்” என்று எழுதி மழையில் இருவரும் பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கோலி. மேலும் பீல்டர்களிடம் இருந்து இரண்டு ரன்களை திருடுவது எங்களுடைய க்ரைம் என்னுடன் யார் இருக்கிறார்கள் யாருன்னு கண்டுபிடிங்க என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இதற்கு பல வகையான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

கோலி பதிவிட இந்த புகைப்படத்தால் மீண்டும் தோனி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெறுகிறாரா ? எதற்காக இந்த புகைப்படத்தை கோலி பதிவிட்டார் ?அணிக்கு தோனி வருவதை கோலி விரும்புகிறாரா ? என்பது போன்ற கேள்விகள் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் எழுந்து வருகின்றன. இருப்பினும் கோலி எதற்காக தோனியுடன் இருக்கும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

Advertisement