மீண்டும் கோலி பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையானது. அணியில் என்ன நடக்கிறது – ரசிகர்கள் ஆவேசம்

Rohith
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

Jadeja

- Advertisement -

உலக கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து கேப்டன் கோலி மற்றும் ரோஹித் இடையே பிரச்சனை உள்ளதாக கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா செல்லும் முன்பு விராட் கோலி எடுத்த புகைப்படத்தில் ரோகித் சர்மா போட்டோ இடம்பெறவில்லை. இதனால் அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து தற்போது பண்ட் பதிவிட்ட புகைப்படத்தில் இந்திய அணியின் வீரர்களான புவனேஷ்வர்குமார், தவான், ரோகித், ஐயர் மற்றும் பண்ட் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரத்தில் வைரலானது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் எங்கே கோலி என்று கமெண்ட் செய்தனர்.

மேலும் விவகாரத்தில் சூடேற்றும் விதமாக தற்போது கோலி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இந்த முறையும் ரோஹித் இடம்பெறவில்லை.மேலும் அதனை ஸ்குவாட் (விளையாடும் அணி) என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மீண்டும் கோலி – ரோஹித் பிளவு குறித்து ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே அணியில் என்ன நிலவரம் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் நிலையில் கோலி பகிர்ந்த இந்த புகைப்படம் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement