2 ஆண்டுகள் ஆகியும் துளியும் பிரியாத காதலை அழகாக வெளிப்படுத்திய கோலி

anushka
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவரும் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றாலும் அப்போது எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கத்தை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை முடித்து இந்தியா திரும்பிய உள்ள இந்த ஜோடி தற்போது ஒரு புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தான் எடுத்தார் என்றும் அந்த புகைப்படத்தின் மீது குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டோவின் சிறப்பு யாதெனில் இதுவரை ஒரே நிற உடைகள் வெளிவந்த இந்த காதல் ஜோடி தற்போது தங்களது காதலை வித்தியாசமான ஒரு வடிவில் காண்பித்துள்ளது.

- Advertisement -

அது யாதெனில் விராட் கோலி அணிந்திருக்கும் அந்த வெள்ளை நிறத்தில் A என்று அனுஷ்காவின் முதல் எழுத்தை பதிந்து அதன் மேல் ஹார்டின் சிம்பிள் வைத்து இருக்கிறார். அந்த குறியீட்டின் காரணம் அனுஷ்கா சர்மாவின் மீதுள்ள வைத்த காதல் தான் என்று அதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சூப்பர் ஜோடி, என்றும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement