மாஸ்டர் பட போஸ்டர் வெளியான அதே நேரத்தில் அதே போன்ற புகைப்படத்தை பகிர்ந்த கோலி – வைரலாகும் புகைப்படம்

Master
- Advertisement -

மாநகரம், கைதி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜயின் நடிப்பில் விஜய் 64 என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து தயாராகி வரும் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று 5 மணிக்கு வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிட்டு படத்தின் டைரக்டரான லோகேஷ் கனகராஜ் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் அதே நேரத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிட்டத்தட்ட அதே போன்று இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த இரண்டு புகைப்படங்களும் எதேச்சையாக ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்களாகும். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி சிறப்பான போட்டோகிராபர் இருக்கும்பொழுது புகைப்படத்தை பற்றிய கவலை இல்லை என்று தனது மனைவி அனுஷ்கா சர்மா எடுத்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமும் விஜயின் மாஸ்டர் போஸ்டரும் ஒத்துப்போக தற்போது இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் ஹிட்டடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement