வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணிநேரத்திலேயே லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்ட கோலி அதில் என் வாழ்வில் மறக்க முடியாத போட்டி இந்த போட்டி தான்.
மேலும் என்னை இந்த போட்டியில் பிட்னஸ் டெஸ்டில் எந்த அளவிற்கு நான் ஓடுவேனோ அந்த அளவிற்கு தோனி இந்த போட்டியில் என்னை ஓட வைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். கோலி திடீரென ஏன் இந்த புகைப்படத்தை பதிவிட்டு தனது கருத்தினை தெரிவித்தார் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படத்தை தோனி ரசிகர்கள் பகிர்ந்து இந்த பதிவினை வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.