என்னைப்போல செய்ய உங்களால் முடியுமா ? ஜடேஜா மற்றும் ரெய்னாவுக்கு சவால் விட்ட கோலி – விவரம் இதோ

Raina
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக உள்ளவர் கோலி. தனது அபாரமான ஆட்டத்தினால் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் இவர் ஏகப்பட்ட சாதனைகளை நாளுக்குநாள் படைத்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறார்.

மேலும் அதன்பின் 2010ல் டி20 மற்றும் 2011ல் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வித கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் 11 வருடத்திற்கு முன்பு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இடம் பெற்று பிறகு இந்திய அணியில் விளையாடிய கோலி பின்னர் 20 வயதில் எடுத்துக்கொண்ட தனது அரும்பு மீசை மற்றும் தாடியுடன் கூடிய ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு விட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு நீங்களும் இதேபோன்று உங்களது உங்களின் புகைப்படத்தை வெளியிட முடியுமா ? என்று ஜடேஜா மற்றும் ரெய்னாவுக்கு சவால் விட்டுள்ளார். கோலியின் இந்த பதிவிற்கு அவர்களிடம் இருந்து பதில் புகைப்படம் வருமா ? என்று பார்க்கலாம்.

Advertisement