கங்குலியின் முக்கிய சாதனையை தகர்க்கவுள்ள கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான டி20 தொடரை முடித்து அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட கோலி மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார்.

Kohli 1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த தொடரில் கோலி கங்குலியின் ஒரு முக்கியமான சாதனையை தகர்க்க உள்ளார். இதுவரை 82 போட்டிகளில் பங்கேற்றுள்ள கோலி 7066 ரன்கள் குவித்துள்ளார். இவர் மேலும் 147 ரன்களை அடிக்கும் பட்சத்தில் கங்குலியின் 7212 ரன்களை கடக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தூரில் நடக்கும் போட்டியில் அவரால் இந்த ரன்களை அடிக்க முடியவில்லை என்றால் கொல்கத்தா டெஸ்டில் நிச்சயம் அந்த ரன்களை அடிக்க வாய்ப்புள்ளது எனவே கொல்கத்தாவில் வைத்தே கங்குலியின் சாதனையை அவர் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.

Kohli

எனினும் அவர் இந்தூர் டெஸ்டிலேயே அவர் நிச்சயம் இந்த மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சச்சின் 15921 ரன்களுடனும் முதலிடத்திலும், டிராவிட் 13288 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement